திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (13:39 IST)

மணிக்கு 100 கி.மீ வேகம்.. 3.7 கிலோவாட் பேட்டரி! – கலக்கும் Ather 450 Apex!

Ather 450 Apex
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாகனங்களை விற்பனை செய்து வரும் ஏத்தர் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஏத்தர் 450 அபெக்ஸ் (Ather 450 Apex) மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.



இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இயற்கைக்கு குந்தகம் இல்லா பேட்டரி வாகனங்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட புதிய ஸ்கூட்டர் மாடல் Ather 450 Apex. இந்த Ather 450 Apex மாடல் பார்ப்பதற்கு ஏத்தரின் முந்தைய மாடலான ஸ்டாண்டர்டு போல தோற்றமளித்தாலும் உள்ளே மேலும் சில சிறப்பம்சங்கள் செய்யப்பட்டுள்ளன.


இந்த அபெக்ஸ் மாடலின் பக்கவாட்டில் கண்ணாடி பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் வழியே காணப்படும் ஆரஞ்சு ப்ரேம் ஸ்கூட்டிக்கு ஒரு எலைட் லுக்கை தருகிறது. இந்த புதிய அபெக்ஸ் மாடலில் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி திறன், 7 கிலோவாட் மோட்டார் திறன் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு மணிக்கு 100 கி.மீ வேகம் வரையிலும் பயணிக்க முடியும். மணிக்கு 40 கி.மீ வேகத்தை அபெக்ஸ் 2.9 நொடிகளில் தொட்டு விடுகிறது.

இந்த அபெக்ஸ் மாடலில் ஸ்மார்ட் எக்கோ, ஸ்போர்ட் மோட், வார்ப் ப்ளஸ், வார்ப், எக்கோ ரைடு என ஆறுவித ட்ரைவிங் மோட்கள் செட் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர ஃபுல் LED லைட்டிங், டச் ஸ்க்ரீன் ஆபரேட்டிங் வசதி, ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஆட்டோ ப்ரைட்னஸ் வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இதன் விலை ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K