1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (12:51 IST)

பில்லியன் கணக்கில் வீழ்ச்சி.. தடுமாறும் சாம்சங் நிறுவனம்! – அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

Samsung
பிரபலமான மின்னணு பொருட்கள் விற்கும் சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டில் பில்லியன் கணக்கில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.



தென் கொரியாவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனமான சாம்சங் நிறுவனம் பல மாடல்களில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிக்கள், ஹெட்ஃபோன்கள், லேப்டாப், வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் என பல மின்சாதன பொருட்களை தயாரித்து உலகம் முழுவதிலும் விற்பனை செய்து வருகிறது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் சாம்சங் முக்கியமானதாகும். அப்படி இருந்தும் கடந்த ஆண்டில் பொருட்கள் விற்பனையில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது சாம்சங் நிறுவனம்.

முதலாவதாக புதிய புதிய ப்ராண்டுகள் நிறைய அறிமுகம் ஆவதும், சாம்சங்கை விட குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் ப்ராண்டுகள் வந்துவிட்டதும் காரணமாக கருதப்படுகிறது. மறுபக்கம் பொருட்கள் உற்பத்தி மட்டுமல்லாமல் பல மின்னணு சாதனங்களுக்கான உதிரி பாகங்களையும் சாம்சங் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.


ஆனால் கொரோனாவுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மின்னணு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை குறைத்ததால் சாம்சங்கின் உதிரி பாக விற்பனையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 2022 நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டில் 35 சதவீதம் (அதாவது 2.13பில்லியன் டாலர்கள்) லாபத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

எனினும் இது லாபத்தில் கணிசமான வீழ்ச்சியே தவிர லாபமே வராத அளவு வீழ்ச்சி அல்ல என்பதால் லாபத்தை கணிசமாக பெருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K