தொடர்புடைய செய்திகள்
- ஒன்னுக்கு இன்னொன்னு சளைச்சதில்ல..! POCO F4 vs POCO F5! – எது பெஸ்ட்?
- அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் வெளியானது Redmi Note 13 5G! – விலை எவ்வளவு தெரியுமா?
- லட்ச ரூவாப்பே..! அள்ளும் கேமரா குவாலிட்டி.. அட்டகாசமான சிறப்பம்சங்கள்! – Vivo X100 series முன்பதிவு தொடக்கம்!
- ராயல் என்ஃபீல்டை பின்னுக்கு தள்ளுமா கவாஸகி! – கலக்கலான கவாஸகி எலிமினேட்டர் இந்தியாவில் அறிமுகம்!
- ஒருதடவை சார்ஜ் போட்டா 800 கி.மீ தூரம் பறக்கும் சூப்பர் கார்! – அதிரடி அம்சங்களுடன் Xiaomi SU7!
இந்தியாவில் முதல்முறையாக HyperOS உடன் களமிறங்கும் Xiaomi! – இனி வரும் ஸ்மார்ட்போன்கள் வேற லெவல்ல இருக்கும்!
பிரபலமான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி முதல்முறையாக இந்தியாவில் புதிய HyperOS-ஐ அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் கோலோச்சும் நிறுவனங்களில் சீனாவை சேர்ந்த ஷாவ்மி நிறுவனமும் ஒன்று. ரெட்மி, போக்கோ உள்ளிட்ட பெயர்களில் பல ஸ்மார்ட்போன்களை ஷாவ்மி வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட MIUI (MI User Interface) முறையில் இயங்கி வருகின்றன.
அடிக்கடி MIUI –ஐ அப்டேட் செய்து வரும் நிலையில் தற்போது MIUI 14 ஷாவ்மி மாடல் ஸ்மார்ட்போன்களில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அதைவிட மிகவும் இலகுவாகவும், பயன்படுத்த எளிதாகவும் உள்ள HyperOS என்ற புதிய இயங்குதளத்தை தனது ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்துகிறது ஷாவ்மி.
இந்த HyperOS-ம் ஆண்ட்ராய்டை அடிப்படையாக கொண்டு இயங்கும் இயங்குதளம் என்றாலும், MIUI –ஐ விட பயன்பாட்டிற்கு எளிதாகவும் வேகமாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.
ஜனவரி 11ம் தேதி ஷாவ்மி இந்தியா சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள POCO X6 Series மற்றும் POCO M6 PRO 5G மாடல்களில் இந்த HyperOS பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்
