1. செய்திகள்
 2. தகவல் தொழில்நுட்பம்
 3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2024 (11:38 IST)

அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் வெளியானது Redmi Note 13 5G! – விலை எவ்வளவு தெரியுமா?

Redmi Note 13 5G
பிரபலமான ரெட்மி நிறுவனம் தனது புதிய Redmi Note 13 5G ஸ்மார்ட்போனின் வேரியண்டுகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கும் வரவேற்பை தொடர்ந்து பல 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் ஷாவ்மி நிறுவனம் தற்போது தனது புதிய Redmi Note 13 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Redmi Note 13 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 • 6.67 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, 120 Hz ரெப்ரெஷ் ரேட்
 • மீடியாடெக் டைமென்சிட்டி 6080 சிப்செட்
 • ஆக்டாகோர் ப்ராசஸர், மாலி G57 MC2 ஜிபியு
 • ஆண்ட்ராய்டு 13, MIUI 14
 • 6 GB / 8 GB / 12 GB RAM = 6 GB / 8 GB விர்ச்சுவல் ரேம்
 • 128 ஜிபி / 256 ஜிபி வரை இண்டெர்னல் மெமரி
 • 1TB நீட்டிக்கக்கூடிய மெமரி கார்டு ஸ்லாட்
 • 108 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா
 • 16 எம்பி முன்பக்க கேமரா
 • 5000 mAh பேட்டரி, 33 W ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்த Redmi Note 13 5G ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் வொயிட், ஸ்டீல்த் ப்ளாக் மற்றும் ப்ரிசம் கோல்டு ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

இந்த Redmi Note 13 5G ஸ்மார்ட்போனின் 6 GB RAM + 128 GB Memory மாடல் ரூ.17,999 ஆகவும், 8 GB RAM + 256 GB Memory மாடல் ரூ.19,999 ஆகவும், 12 GB RAM + 256 GB Memory மாடல் ரூ.17,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K