செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (00:19 IST)

ஐபிஎல்-201; சென்னை கிங்ஸ் பரிதாபம்...மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி...

இன்று சென்னை கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் மும்பை அணியின் போலார்ட் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

ஐபிஎல் தொடரின் இரு பெரும் ஜாம்பவான் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் கொண்டவை என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுது.

இந்நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில், டூபிளஸிஸ் 50 ரன்களும், கொயீன் அலி 58 ரன்களும், எடுத்தனர். ரெய்னா 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

பின்னர், அம்பதி ராயுடு 27 பந்துகளில் 72 ரன்கள் அடித்து தாண்டவம் ஆடினார். ஜடேஜா 22 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை அணி  20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்து மும்பைக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய மும்பை அணி கடைசி ஓவரில் போலார்ட் அதிரடியில் திரில் வெற்றி பெற்றது. பொலார்ட் 34 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்.

சென்னை அணிக்கு எதிராக மும்பை அணி 6 விக்கெட்டுகள் இழந்து 219 ர்னகள் எடுத்தது வெற்றி பெற்றது.