வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்
Last Modified: வியாழன், 29 ஏப்ரல் 2021 (19:32 IST)

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக ஆட்சி !

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டிகள் காணப்பட்டது. இதர கட்சிகளான சீமானின் நாம் தமிழர், தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருந்தாலும் அரசியல் விமர்சகர்கள் திமுக அதிமுக கட்சிகளில் எதாவது ஒன்றுதான் ஆட்சிக்கு வரும் எனக் கணித்தனர்.

அதன்படி  தேர்தலுக்கு முந்தைய கருத்துகளைப் போல் தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

அதில், ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி சுமார் 160 -170 இடங்கள் பெற்றித் தனிப்பெரும்பான்மையுடன்  ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தற்போதைய ஆளுங்கட்சியான அதிமுக 58-68 இடங்களில் வெற்று பெரும் எனவும், அதிமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்த தினகரன் சுமார் 4 -6 இடங்கள் பெரும் எனவும், கமல்ஹசனின் மக்கள் நீதி மய்யம் 0-2 இடங்களைப் பெரும் எனக் கூறப்பட்டுள்ளது. 

அதேபோல் ரிபப்ளிக் சேனல் புதுச்சேரியில் நடத்திய கருத்துக் கணிப்பில்,என்.ஆர்.காங்கிரஸ் 16-20 இடங்களிலும், காங்கிரஸ்- 11- 13 இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இதே போல் இன்று மற்ற முக்கிய சேனல்களின் கருத்துக்கணிப்புகள் சற்றுநேரத்தில் வெளியாகவுள்ளது.
 
சினோஜ்