வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 ஏப்ரல் 2021 (17:58 IST)

யாரும் உதவவில்லை..தந்தையின் சிதைக்கு தீ மூட்டிய சிறுமி

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களைத் இத் தொற்றிலிருந்து காக்க மத்திர அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ளிட்ட இதர மாநிலங்களில் இரவு நேர ஊடரங்கு அமலில் உள்ளது.
இநிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் நார்த் 24 பர்னாகல் என்ற மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் உத்தரபிரதேசத்தில் தங்கி வேலை செய்து வந்தனர்.

அக்குடும்பத்தின் தலைவர் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டால், அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தர். அவரது  குடும்பத்தினர் இறுதிச் சடங்குக்காக உதவி வேண்டி உறவினர்களின் கேட்டும் யாரும் உதவவில்லை. இந்நிலையில் போலீஸார் அவர்களுக்கு உதவினர்.

இந்துகளின் சம்பிரதாயப்படி இறந்துபோனவரின் சிதைக்கு ஆண்கள்தான் தீ மூட்ட வேண்டும். ஆனால் இறந்தவருக்கு யாரும் உதவ முன்  வராததால் அவரது 5 வயது மகளே இறந்த தந்தையின் சிதைக்கு தீ மூட்டினார்.