திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Sinoj
Last Modified: புதன், 28 ஏப்ரல் 2021 (23:46 IST)

ஐபிஎல்-2021; சென்னை அணி தொடர்ந்து 5 வது வெற்றி...

இன்று நடைபெற்ற ஐதராபாத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அந்த அணியின் சார்பில்  தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பெயர்ஸ்டோ களமிறங்கினார். பெயர்ஸ்டோ 7 ரன்களில் அவுட் ஆனாலும் வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே ஆகிய இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தினர் அதன் பிறகு வந்த வில்லியம்சன் மற்றும் கேதார் ஜாதவ் அதிரடியாக விளையாடியதை அடுத்து ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை அணியின் நிங்கிடி 2 விக்கெட்டுகளையும் சாம் கர்ரன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து  172 என்ற இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.  கெய்க்வாட் 36 பந்திலும், டு பிளிஸிஸ் 32 பந்திலும் இருவரும் அரைசதம் அடித்து அணியின் வழிநடத்திச் சென்றனர்.   பின்னர் ஜடேஜா , சுரேஷ் ரெய்னாவுடன் கூட்டணி சேர்ந்து நிதானமாக ஆடினார். எனவே 18.3 ஓவரில் சென்னை அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணி தொடர்ந்து இந்த வெற்றியை 5 வது முறை ருசிக்கிறது. இதனால் சென்னை அணிவீரர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.