திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (23:46 IST)

ஐபிஎல்-2021; பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இன்று பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 17வது போட்டியான இன்று மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன. இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்த நிலையில் மும்பை  அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில்   விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணிக்கு 131 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்துப் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.

 பஞ்சாப் கேப்டன்  52 பந்துகளில் அரைசதம் கடந்து 60 ரன்கள் அடித்தார்.  பின்னர் கெயில், கே.எஸ்.ராகுல் இணைஉந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ரனர். பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.