திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (18:56 IST)

சிறையில் இருக்கும் ஆர்யன்கனுக்கு ரூ.4500 அனுப்பி வைத்த ஷாருக்கான்!

போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ரூபாய் 4,500 அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 
சமீபத்தில் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆரியன்கன் சிறையில் உள்ளார் என்பதும் அவர் சமீபத்தில் தனது பெற்றோர்களிடம் பேசி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது 
 
மேலும் தொலைபேசியில் பெற்றோர்களுடன் ஆரியன் பேசியதாகவும் இந்த வசதி சமீபத்தில்தான் கொண்டுவரப்பட்டது என்பது ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்றுமுறை குடும்பத்தினர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் வசதி கொண்டு வரப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சிறை கேண்டினில் உணவுபொருட்களை வாங்க விதிகளுக்குட்பட்டு ஆரியன்கனுக்கு ரூபாய் 4,500 ஷாருக்கான் பணம் அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.