திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (10:26 IST)

ஃப்லிம் காட்டும் விவோ - பிசிசிஐ.... ஸ்பான்சர் ரத்து வெறும் பூசுத்தலா?

நடப்பாண்டு மட்டும் ஸ்பான்சர்ஷிப்பை ரத்து செய்துகொள்வதாக பிசிசிஐயிடம் விவோ அறிவிப்பு. 
 
கடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்க இருந்த 13-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு தற்போது செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை அமீரகத்தில் 53 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  
 
இந்த கூட்டத்தின் முடிவில் ஸ்பான்சர்கள் அனைவரும் பழைய ஒப்பந்தத்தின்படியே தொடர்வார்கள் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. ஆனால், இப்போது இந்திய சீனா உறவு சுமூகமாக இல்லாத நிலையில் ஸ்பான்சராக இருப்பது சரியாக இருக்காது என்பதால் விவோ நிறுவனம் விலகியுள்ளது. 
 
அதாவது நடப்பாண்டு மட்டும் ஸ்பான்சர்ஷிப்பை ரத்து செய்துகொள்வதாக பிசிசிஐயிடம் விவோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் புதிய ஸ்பான்சர்களை தேடும் நிர்பந்தத்துக்கு பிசிசிஐ ஆளாகியுள்ளது. 
 
விவோ நிறுவனம் 2017 ஆம் ஆண்டு முதல் 2022 வரை ஐந்து வருடத்திற்கு ஐ.பி.எல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சராக இருக்க 2199 கோடி ரூபாய்க்கு பிசிசிஐ-யிடம் ஒப்பந்தம் போட்டது. தற்போது இந்த ஆண்டு மட்டும் ஸ்பான்சரில் இருந்து விலகுவதால் இனி மீதமுள்ள அடுத்த இரண்டு ஆண்டுகள் மீண்டும் விவோ ஸ்பான்சராக மாற வாய்ப்புள்ளது.