டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் பாகிஸ்தான் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன. இந்தியாவுடனான மோதல்போக்கு காரணமாக வங்கதேச அணி தொடரிலிருந்து விலகிய நிலையில், அதற்கு ஆதரவாக பாகிஸ்தானும் விலகும் என வதந்திகள் பரவின.
ஆனால், தற்போது பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தாங்கள் உலகக்கோப்பையில் பங்கேற்பது உறுதி என்றும், பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் மட்டும் விளையாட மாட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து இன்னும் மவுனம் காத்து வருகிறது. அரசியல் காரணங்களால் கிரிக்கெட் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஐசிசி இந்த பிரச்சினையை எவ்வாறு கையாளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
Edited by Siva