புதன், 18 பிப்ரவரி 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 1 பிப்ரவரி 2026 (09:45 IST)

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. ஏற்கனவே தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி, நேற்று நடந்த கடைசி போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இளம் வீரர் இஷான் கிஷான் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. குறிப்பாக, தனது முதல் டி20 சர்வதேச சதத்தை பதிவு செய்த இளம் வீரர் இஷான் கிஷானின் ஆட்டம் ரசிகர்களை கட்டிப்போட்டது. பின்னர் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19 ஓவர்களில் 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 
 
Edited by Siva