1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
  4. IPL 2022 Hyderabad team wins thrill

ஐபிஎல் 2022-; ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி

ipl
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியின் வெற்றி தோல்வியை எந்த விதத்திலும் அடுத்த சுற்றை பாதிக்காது என்பதால் இந்த போட்டி ஒரு ஒப்புக்கு சப்பாணி போட்டியாகவே கருதப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதனை அடுத்து ஹைதராபாத்  அணி பேட்டிங் செய்தது. அதில்,ஷர்மா 9 ரன்களும், கார்க் 42 ரன்களும், திரிப்பாதி 76 ரன்களும்,பூரன் 38 ரன்களும்,வில்லியம்சன் 8 ரன்களும்,,  சுந்தர்9 ரன்களும் அடித்தனர். எனவே, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதையடுத்துக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் சர்மா 48 ரன்களும், டேவிட் 46ரன் களும், இஷான் கிஷன் 43ரன் களும் அடித்தனர், 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 190 ரன் கள் மட்டுமே எடுத்துத் தோற்றது.

எனவே ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  
About Writer
Sinoj