வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By siva
Last Updated : செவ்வாய், 3 நவம்பர் 2020 (19:12 IST)

8 மாத கர்ப்பத்திலும் கோஹ்லியை உற்சாகப்படுத்திய அனுஷ்கா சர்மா!

8 மாத கர்ப்பத்திலும் கோஹ்லியை உற்சாகப்படுத்திய அனுஷ்கா சர்மா!
நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தாலும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த போட்டியை நேரில் பார்க்க அனுஷ்கா சர்மா வந்து அவ்வப்போது விராத் கோலியை உற்சாகப்படுத்தும் கொண்டிருந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
 
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி அணி தனது இலக்கை 17.3 ஓவருக்கு மேல் எட்டினால் பெங்களூரு அணி தகுதி பெற்று விடும் என்ற நிலையில் விராட் கோலியின் அற்புதமான கேப்டன்சி காரணமாக அந்த அணி 19 ஓவரில் தான் இலக்கை எட்டியது. இதனால் பெங்களூரு அணி தோல்வியடைந்தாலும் விராட் கோலியின் சரியான திட்டமிடல் காரணமாக அந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில்தான் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இருப்பினும் பெங்களூரு அணியின் முக்கிய போட்டியான இந்த போட்டியை பார்க்க அவர் நேரில் மைதானத்திற்கு வந்திருந்தார் என்பதும், அவ்வப்போது விராத் கோலியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது