வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 28 அக்டோபர் 2020 (23:57 IST)

ஐபிஎல்-2020; மும்பை இந்தியன்ஸ் அணி 5விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி !

பெங்களூருக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய 48 வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன் அணி பந்து வீச்சுத் தேர்வு செய்தது.

நடப்பு 13 வது ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு ஆச்சர்யமும் அதிரடி விருந்து வைத்து வருகின்றது. இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன் அணி பந்து வீச்சுத் தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

பெங்களூர் அணியில் அதிகப்பட்டசமாக படிக்கல் 74 ரன்களும், பிலிப்33 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து விளையாடிய மும்பை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இதில், சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக விளையாடி பெங்களூர் அணியினர் பந்துகளைச் சிதறடித்தார்.

43 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து அசத்தினார் இறுதியில் 19.1 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.