டி 20 போட்டிக்கே நைட் வாட்ச்மேனா? கோலியை வச்சு செஞ்ச சேவாக்!

Last Updated: சனி, 17 அக்டோபர் 2020 (11:03 IST)

கடந்த போட்டியில் டிவில்லியர்ஸுக்கு முன்பாக வாஷிங்டன் சுந்தரை கோலி களமிறக்கியதை சேவாக் கேலி செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 177 ரன்கள் சேர்த்தது. டிவில்லியர்ஸை 6 ஆவதாக கோலி இறக்கியது மிகப் பெரிய தவறான முடிவாக மாறியது. 16 ஆவது ஓவரில் இறங்கிய அவர் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தால் தவறான பந்தை அடித்து அவுட் ஆனார்.

இந்நிலையில் கோலியின் இந்த முடிவை பலரும் விமர்சித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்கும் தன் பங்குக்கு கேலி செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பாலிவுட்டின் பிகே பட அமீர்கான் போன்ற தோற்றத்தில் பேசியுள்ள அவர் ‘நான் விகே, பெங்களூரு கேப்டன். நான் இந்த பூமியைச் சேர்ந்தவன் அல்ல. நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையத் தவிர வேறில்லை. நான் என்ன தவறு செய்தேன். டிவில்லியர்ஸை இறக்கவில்லை என கிண்டல் செய்கிறார்கள். டிவில்லியர்ஸுக்குப் பதிலாக முதல் முறையாக
டி20
கிரிக்கெட்டின் நைட் வாட்ச்மேன் வாஷிங்டன் சுந்தரை தரிசித்தேன்.’ எனக் கோலியை சரமாரியாக கேலி செய்ய அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :