நேற்றைய போட்டியில் கோலி செய்த மிகப்பெரிய தவறு ! அதனால் பறிபோன வெற்றி!

Last Updated: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (10:57 IST)

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி கேப்டன் கோலி டிவில்லியர்ஸை மிகவும் பின் வரிசையில் இறக்கியது ஆபத்தான முடிவாக அமைந்தது.

பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 177 ரன்கள் சேர்த்தது. டிவில்லியர்ஸை 6 ஆவதாக கோலி இறக்கியது மிகப் பெரிய தவறான முடிவாக மாறியது. 16 ஆவது ஓவரில் இறங்கிய அவர் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தால் தவறான பந்தை அடித்து அவுட் ஆனார்.

இதனால் பெங்களூர் அணியால் மிகப்பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. இந்நிலையில் இந்த முடிவு குறித்து பேசியுள்ள கோலி ‘சில பரிசோதனை முடிவுகள் நமக்கு சரியான பலனை அளிப்பதில்லை’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :