தோனி செய்தது தவறே.... கன்னட பிரபலம் ஆவேசம்..

Dhoni
Last Modified வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (14:50 IST)
நேற்றைய ஆட்டத்தில் தோனி நடுவர்களுடன் சண்டையிட்டது தவறு என கன்னட பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.
நேற்றைய சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி ஒரு ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. கடைசி ஓவரில் ஒரு பந்து நோபால் என ஒரு அம்பயரால் அறிவிக்கப்பட்டு பின்னர் இன்னொரு அம்பயரால் நோபால் இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதனை வெளியில் இருந்து பார்த்து கொண்டிருந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி களத்திற்கு சென்று நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் அந்த பந்து நோபாலாக அறிவிக்கப்படவில்லை. இந்த செயலால் தோனிக்கு 50% அபராதம் விதிக்கப்பட்டது. 
தோனிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் கன்னட பிரபலம் ஒருவர் தோனி ரசிகனாக எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம். என் கேப்டன் கூல் பொறுமையை இழந்து மைதானத்தில் நுழைந்து சண்டையிட்டது தவறே என கூறியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :