சுப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற மும்பை: ஐதராபாத் பரிதாபம்

Last Modified வெள்ளி, 3 மே 2019 (06:32 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 51வது முக்கிய லீக் போட்டியில் மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய இரு அணிகளும் தலா 162 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் விளையாடப்பட்டது. இதில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது
முன்னதாக கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஐதராபாத் அணிக்கு இருந்தது. ஆனால் அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு இரண்டு ரன்கள், இரண்டு ஒரு ரன்கள் என 16 ரன்கள் மட்டுமே கிடைத்ததால் சூப்பர் ஓவர் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. சென்னை, மும்பை, டெல்லி என மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் தகுதி பெறும் இன்னொரு அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
ஸ்கோர் விபரம்:

மும்பை இந்தியன்ஸ்: 162/5
20
ஓவர்கள்

டீகாக்: 69
ரோஹித் சர்மா: 24
சூர்யகுமார் யாடவ்: 23
சன்ரைசர்ஸ் ஐதராபாத்: 162/6
20 ஓவர்கள்

மணிஷ் பாண்டே: 71
முகமது நபி: 31
சஹா; 25

சுப்பர் ஓவர்:

ஐதராபாத்: 7/2
0.4 ஓவர்
மும்பை: 9/0 0.3 ஓவர்

ஆட்டநாயகன்: பும்ரா


இதில் மேலும் படிக்கவும் :