1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Updated : திங்கள், 13 மே 2019 (15:56 IST)

ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை பறிகொடுத்த சிஎஸ்கே: 4வது முறை மும்பை சாம்பியன்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணியை மும்பை அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 2013, 2015, 2017 மற்றும் 2019 என நான்கு முறை மும்பை அணி கோப்பையை வென்றது. நான்கு முறையும் ரோஹித் சர்மாதான் அந்த அணிக்கு கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி பக்கமே கடைசி வரை ஆட்டம் இருந்தது. கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் அடிக்க வேண்டியிருந்த நிலையில் 4வது பந்தில் வாட்சனும் 6வது பந்தில் தாக்கூரும் அவுட் ஆனதால் சென்னை அணியால் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் தாக்கூர் ஒரு ரன் எடுத்திருந்தால் கூட போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றிருக்கும். ஆனால் தாக்கூர், மலிங்காவின் அந்த பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனதால் சிஎஸ்கே அணி கோப்பையை இழந்தது.
 
ஹர்திக் பாண்ட்யா கொடுத்த எளிய கேட்சை சுரேஷ் ரெய்னா மிஸ் செய்ததும், தோனி, வாட்சன் ரன் அவுட்டும் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
 
ஸ்கோர் விபரம்:
 
மும்பை அணி: 149/8  20 ஓவர்கள்
 
பொல்லார்டு: 49 ரன்கள்
டீகாக்: 29 ரன்கள்
இஷான் கிஷான்: 23 ரன்கள்
ஹர்திக் பாண்ட்யா: 16 ரன்கள்
 
சிஎஸ்கே அணி 148/7  20 ஓவர்கள்
 
வாட்சன்: 80
டீபிளஸ்சிஸ்: 26
பிராவோ: 15
 
ஆட்டநாயகன்: பும்ரா
தொடர் நாயகன்: ரஸல்