150 ரன்கள் இலக்கு! மும்பையை வீழ்த்துமா சிஎஸ்கே

Last Modified ஞாயிறு, 12 மே 2019 (21:18 IST)
ஐதராபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. டீகாக் 29 ரன்களும், இஷான் கிஷான் 23 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 16 ரன்களும், ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் தலா 15 ரன்களும், பொல்லார்ட்
41 ரன்களும் எடுத்துள்ளனர்.

அதேபோல் சிஎஸ்கே அணியின் தீபக் சஹார் 3 விக்கெட்டுக்களையும், தாக்கூர் மற்றும் பிராவோ தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர். சுரேஷ் ரெய்னா ஒரு எளிதான கேட்சை மிஸ் செய்தாலும், சிஎஸ்கேவை பொருத்தவரையில் இன்று பொளலிங் மற்றும் ஃபீல்டிங் அபாரமாக இருந்தது.

இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் சிஎஸ்கே அணி 150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. சிஎஸ்கே அணியில் டூபிளஸ்சிஸ், வாட்சன், ரெய்னா, ராயுடு, தோனி, பிராவோ, ஜடேஜா ஆகிய ஏழு பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த இலக்கை எளிதில் எட்டி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :