விராத் கோஹ்லி, டிவில்லியர்ஸ் அபாரம்: கொல்கத்தாவுக்கு 206 இலக்கு!

Last Modified வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (21:40 IST)

இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி விராத்கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர்களின் அபார பேட்டிங் காரணமாக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 205 ரன்கள் குவித்துள்ளது.
 
விராத் கோஹ்லி மிக அபாரமாக விளையாடி 84 ரன்கள் எடுத்தார். அதேபோல் அவருக்கு இணையாக சூப்பராக விளையாடிய டிவில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். தொடக்க ஆட்டக்காரர் பார்த்திவ் பட்டேல் 25 ரன்களும், ஸ்டோனிஸ் 13 பந்துகளில் 28 ரன்களும் எடுத்தனர்.
 
கொல்கத்தா தரப்பில் நரேன், குல்தீப் யாதவ் மற்றும் ரானா தலா ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இந்த நிலையில் 206 என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணியினர் விளையாடவுள்ளனர். லின், உத்தப்பா, நரேன், ரானா, தினேஷ் கார்த்திக் ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள் இந்த இலக்கை எட்ட உதவுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :