ஐபிஎல் 2019: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த கொல்கத்தா!

Last Modified வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (19:56 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வி அடைந்த விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி இன்று கொல்கத்தா அணியுடன் மோதவுள்ளது. இன்றாவது வெற்றி பெற்று புள்ளிக்கணக்கை பெங்களூரு துவக்குமா? என்று ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் சற்று முன் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் பெங்களூரு அணி பேட்டிங் செய்யவுள்ளது.

இன்றைய ஆடும் 11 பேர் கொல்கத்தா அணியில் லின், உத்தப்பா, நரேன், ரானா, தினேஷ் கார்த்திக், கில், ரஸல், செளவ்லா, குல்தீப் யதவ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஃபெர்குசன் ஆகியோர் உள்ளனர்.

அதேபோல் பெங்களூரு அணியில் விராத் கோஹ்லி, பார்த்தீவ் பட்டேல், டிவில்லியர்ஸ், ஸ்டோனிஸ், எம்.எம்.அலி, நாத், நேஹி, சயினி, செளதி, சாஹால் மற்றும் சிராஜ் ஆகியோர் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :