ஐபிஎல் 42வது ஆட்டம்: ஹைதராபாத், டெல்லி அணிகள் மோதல்

s
Last Modified வியாழன், 10 மே 2018 (11:21 IST)
11-வது ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த ஹைதராபாத் அணியை, டெல்லி அணி எதிர்கொள்கிறது.
 
ஐபில் தொடரின் 42வது ஆட்டம் ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 
இரு அணிகளுக்கும் இது 11வது போட்டியாகும், ஹைதராபாத் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி, 8 போட்டிகளில் வென்று பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் டெல்லி அணி 10 போட்டிகளில் விளையாடி வெறும் 3 போட்டியில் மட்டும் வென்றதால் பிளேஆப் வாய்ப்பை இழந்தது.
s
 
டெல்லி அணி முந்தைய லீக் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :