வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 9 மே 2018 (18:04 IST)

ஐபிஎல் போட்டிகள் நேரம் திடீர் மாற்றம்: ஏன் தெரியுமா?

கடந்த சில நாட்களாக 11வது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் இரவு எட்டு மணிக்கு தொடங்கி சுமார் 11.30 மணிக்கு முடிவடைகிறது. இந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கள் போட்டிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இரவு எட்டு மணிக்கு போட்டி ஆரம்பமாவதால் போட்டியை பார்க்கும் ரசிகர்கள் மறுநாள் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வதற்கு சிரமமாக இருப்பதாக் ஐபிஎல் நிர்வாகிகளுக்கு பல புகார்கள் வந்தன, மேலும் போட்டியின் இடையே மழை வந்தாலும் சிக்கல் ஏறப்டுகிறது.
 
இந்த புகார்களை கருத்தி கொண்டு மே 22ஆம் தேதி முதல் நடைபெறும் பிளே ஆப் சுற்று மற்றும் இறுதி போட்டி ஆகிய போட்டிகளை இரவு எட்டு மணிக்கு பதிலாக ஏழு மணிக்கே தொடங்கவுள்ளதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
 
ஐபிஎல் நிர்வாகிகளின் இந்த முடிவுக்கு ஐபிஎல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.