1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 9 மே 2018 (18:41 IST)

வடஇந்தியாவில் நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்

ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுகத்தின் எதிரோலியால் டெல்லி, பஞ்சாப் , காஷ்மீர், அரியானா மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
இன்று மாலை ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் சுமார் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் குழுங்கின.
 
இந்த நிலநடுகத்தின் எதிரோலியால் இந்தியாவின் முக்கிய மாநிலங்களான டெல்லி, பஞ்சாப் , காஷ்மீர், அரியானா ஆகிய பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
 
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியப் பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு குழு ஆராய்ச்சி செய்து வருகிறது.