வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Modified: திங்கள், 14 மே 2018 (13:03 IST)

பிளேஆப் வாய்ப்பை தக்கவைக்குமா பஞ்சாப்? பெங்களூருவுடன் இன்று மோதல்

ஹால்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன.
 
ஐபில் தொடரின் 48-வது ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் , கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

 
 
இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிக்களைப் பெற்றுள்ள பஞ்சாப் அணி, இந்த ஆட்டத்தில் வென்றால் பிளேஆப் வாய்ப்பை தக்கவைத்து கொள்ளலாம் என்ற நிலையில் பெங்களூரு அணியை சந்திக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்திருந்த பெங்களூரு அணி, கடந்த ஆட்டத்தில் டெல்லி அணியை வீழத்தியதன் மூலம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் பெங்களூரு அணியோ ஏற்கனேவே பிளேஆப் வாய்ப்பை இழந்துவிட்டதால், இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் களமிறங்குகிறது.
 
இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.