வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 13 மே 2018 (21:50 IST)

மும்பை-ராஜஸ்தான் போட்டியில் வெற்றி யாருக்கு?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 47 வது போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தற்போது மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்ததால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. லீவிஸ் 60 ரன்களும் யாதவ் 38 ரன்களும் எடுத்தனர். 
 
ராஜஸ்தான் அணியை பொருத்தவரையில் ஆர்ச்சர் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும், குல்கர்னி, மற்றும் உனாகட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் ராஜஸ்தானி அணி 169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்யவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.