திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 13 மே 2018 (07:00 IST)

விறுவிறுப்பான போட்டியில் பெங்களூர் வெற்றி! மீண்டும் ஒரு வாய்ப்பா?

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 45வது போட்டியில் டெல்லி அணியை பெங்களூர் அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அந்த அணி தற்போது 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இனிவரும் மூன்று போட்டிகளிலும் பெங்களூர் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.
 
இனி நேற்று நடைபெற்ற பெங்களூர்-டெல்லி அணிகளின் போட்டி முடிவுகளை பார்ப்போம்
 
டெல்லி அணி: 181/4  20 ஓவர்கள்
 
ஆர்.ஆர்.பேண்ட்: 61 ரன்கள்
அபிஷேக் சர்மா: 46 ரன்கள்
எஸ்.எஸ்.ஐயர்: 32 ரன்கள்
 
பெங்களூரு அணி: 187/5 19 ஓவர்கள்
 
விரத் கோஹ்லி: 70 ரன்கள்
டிவில்லியர்ஸ் : 72 ரன்கள்
 
ஆட்டநாயகன்: டிவில்லியர்ஸ்
 
நேற்று நடைபெற்ற 44வது போட்டியில் கொல்கத்தா அணி, பஞ்சாப் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அடுத்த சுற்றுக்கு ஐதராபாத் தகுதி பெற்றுவிட்ட நிலையில் சென்னை, பஞ்சாப், கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், பெங்களூர் ஆகிய அணிகளில் மூன்று அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் நிலை தற்போது உள்ளது.