மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்: அடுத்த சுற்றுக்கு செல்லுமா?

Last Modified திங்கள், 14 மே 2018 (06:09 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பையை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை 168 ரன்கள் அடித்தது. லீவிஸ் 60 ரன்களும், யாதவ் 38 ரன்களும் பாண்ட்யா 36 ரன்களும் அடித்தனர்.

எனவே 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி, அதிரடியாக விளையாடி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணியின் பட்லர் மிக அபாரமாக விளையாடி 37 பந்துகளில் 94 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டதோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 6 வெற்றி 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்த அணி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :