சென்னையில் இருந்து போட்டி மாற்றம் செய்யப்பட்டது கடினமான முடிவாகும்- பிளமிங்

f
Last Modified செவ்வாய், 29 மே 2018 (11:52 IST)
சென்னையில் இருந்து போட்டி புனேவுக்கு மாற்றப்பட்டது கடினமான முடிவு என்று சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

 
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை-ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சென்னை அணி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
 
இந்த வெற்றி குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
 
”கொல்கத்தாக்கு எதிரான ஒரு ஆட்டத்துடன், சென்னையில் இருந்து போட்டி புனேவுக்கு மாற்றப்பட்டது கடினமான முடிவாகும். போட்டி இடம் மாற்றம் என்பது எங்களது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது அல்ல. எங்கள் அணி வீரர்கள் மீது நாங்கள் வைத்த நம்பிக்கை அவர்களது சிறப்பான செயல்பாட்டின் மூலம் நீருபித்துள்ளனர்.
 
ஷேன் வாட்சன் பிக்பாஷ் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் அவரை சென்னை அணிக்கு தேர்வு செய்தோம். அவர் சென்னை அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார். எங்களது அணியில் உள்ள வீரர்கள் அனுபவசாளிகள் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக விளையாடினர். சென்னை அணியின் வெற்றியில் கேப்டன் தோனியின் தாக்கம் மிகவும் முக்கியமானது. தோனி அணியில் உள்ள வீரர்களிடம் இருந்து அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும் ஆற்றல் பெற்றவர்” என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :