தோனி ஒரு நாள் பிரதமரானால் என்ன ஆகும்?: விக்னேஷ் சிவன்
தோனி ஒரு நாள பிரதமரானால் என்ன ஆகும் என்று விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகின் தலைசிறந்த கேப்டனாகவும், ஃபினிஷராகவும் திகழ்பவர் தோனி. இவர் கடந்த ஆண்டு கேப்டன்ஷிப்பில் இருந்து தானாக விலகினார்.
இந்நிலையில் 2 ஆண்டுகள் கழித்து ஐபிஎல்லில் பங்கேற்கும் சென்னை அணிக்கு கேப்டனாக செயல்பட்டு 3வது முறையாக சாம்பியன் பட்டம் வாங்கி தந்துள்ளார். இதனால் இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தோனி ஒரு நாள் பிரதமரானால் என்ன ஆகும்? என பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
“ "தோனி என்றாவது ஒருநாள் இந்தியாவின் பிரதமரானால் என்ன ஆகும்? மிகச்சிறந்த தலைவர், மிகச்சிறந்த மனிதர். விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் 40 வயதிற்கு பிறகு மறைந்து விடுவார்கள்.. ஆனால் அவருக்கு இது பொருத்தமாகாது.
தோனி இன்னும் மிகப்பெரிய அளவில் வரவேண்டும். எதிர்காலத்தில் மிகச்சிறந்த விஷயங்களைச் செய்ய வேண்டும். விளையாட்டில் மட்டுமல்ல, நாட்டுக்காகவும்” என்று தெரிவித்துள்ளார்.