பூனேவில் இருந்து லக்னோவிற்கு மாற்றப்படும் ஐபிஎல் போட்டிகள்..

Last Updated: திங்கள், 23 ஏப்ரல் 2018 (16:22 IST)
பூனேவில் இருந்து ஐபிஎல் போட்டிகள் லக்னோவிற்கு மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. 
 
ஐபிஎல் 20 ஓவர் போட்டியில் பிளேஆப் சுற்றின் இரண்டு ஆட்டங்கள் புனேயில் நடைபெறுகிறது. எலிமினேட்டர் ஆட்டம் மே 23 ஆம் தேதியும், குவாலி பையர் 2 ஆட்டம் மே 25 ஆம் தேதியும் பூனேவில் நடத்தப்படுகிறது.
 
ஆனால், காவேரி போராட்டம் காரணமாக சென்னையில் நடைபெறுவதாக இருந்த போட்டிகள் பூனேவிற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் புனேயில் நடைபெற இருக்கும் இரண்டு பிளே ஆப் ஆட்டங்கள் அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது.
 
புனேயில் நடைபெற இருந்த பிளே ஆப் சுற்றின் 2 ஆட்டங்கள் லக்னோவுக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. ஆனாலும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :