செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Modified: வியாழன், 19 ஏப்ரல் 2018 (17:25 IST)

இளம் வீரரிடம் மன்னிப்பு கேட்ட பாண்டியா

இளம் வீரரிடம் மன்னிப்பு கேட்ட பாண்டியா
பெங்களூருக்கு எதிரான போட்டியில் பந்து தாக்கி காயமடைந்த மும்பை வீரர் இஷான் கிஷனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா.
 
நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
 
இந்த போட்டியின் 13-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பீல்டிங் செய்து தூக்கி ஏறிந்த பந்து, மும்பை அணியின் வீக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் முகத்தை பதம் பார்த்தது. இதனையடுத்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இளம் வீரரிடம் மன்னிப்பு கேட்ட பாண்டியா
 
இதற்கு வருத்தம் தெரிவித்து ஹர்திக் பாண்டியா தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.