1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 29 மார்ச் 2018 (17:22 IST)

நெட்டிசன்களின் கிண்டல் எதிரொலியால் மன்னிப்பு கேட்ட சசி தரூர்

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து பதிவில் மகாவீரரின் படத்திற்கு பதிலாக புத்தரின் படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் எம்பி சசி தரூர்.

 
 
இன்று இந்தியா முழுவதும் மகாவீரர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்பி சசி தரூரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

 
 
அந்த வாழ்த்து பதிவில் மகாவீரரின் படத்திற்கு பதிலாக புத்தரின் படத்தை பதிவிட்டிருந்தார். அதனால் நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து பதிவிட்டு வந்தனர்.
 
இதற்கு பதில் அளித்து அவர் வெளியிட்ட பதிவில், நான் செய்த தவறுக்கு மன்னித்துவிடுங்கள் தவறான இணையதளத்தில் இருந்து இந்த புகைப்படத்தை எடுத்துவிட்டேன் என்றும், எனது தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி என்றார்.