டெல்லிக்கு 195 ரன்கள் இலக்கு...

Last Updated: சனி, 14 ஏப்ரல் 2018 (18:24 IST)
ஐபிஎல் சீசன் 11 நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் மும்மை அணியும் டெல்லி அணியும் தற்போது விளையாடி வருகின்றனர். 
முதல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் துவங்கிய மும்பை அணி, முதலில் அதிரடியாக ரன் குவிப்பில் வேகமெடுத்தது. 
 
கடைசியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணிக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது களமிறங்கிய உள்ள டெல்லி அணியின் துவக்க வீரர்களாக காம்பீர் மற்றும் ராய் களமிறங்கியுள்ளனர். மூன்று ஓவரின் முடிவில் டெல்லி விக்கெட் ஏதும் இழக்காமல் 26 ரன்கள் குவித்துள்ளது. 
 
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இதுவை போட்டியிட்ட இரண்டு ஆட்டங்களிலுமே தோல்வியடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எனவே, இரு அணிகளும் முதல் வெற்றிக்காக போராடும் பட்சத்தில் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :