1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Ambedkar statue broken in delhi

அம்பேத்கர் சிலை உடைப்பு: டெல்லியில் பரபரப்பு!

அம்பேத்கர்
டெல்லியில் மர்ம நபர்கள் சிலர் டாக்டர் அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று இந்தியா முழுவதும் சட்டமேதை அம்பேத்கரின் 127-வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் டெல்லியில் உள்ள ரிச்பால் கிராமத்தில் நேற்றிரவு அம்பேத்கரின் சிலையை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். சிலை உடைக்கப்பட்டதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக போலீசார் சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
பெண் குழந்தை இருக்கிறாள்...உள்ளே வர வேண்டாம் : பாஜகவிற்கு எதிராக நெட்டிசன்கள்