செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (16:48 IST)

சிஎஸ்கே பூனேவில் விளையாட தடை? துரத்தி அடிக்கும் தண்ணீர் பிரச்சனை!

சென்னை அணி விளையாட உள்ள மீதமுள்ள 6 போட்டிகள் பூனே மைதானத்திற்கு மற்றப்பட்டுள்ளது. இனி சென்னை அணியின் தாய்வீடு பூனேதான் என கூறப்பட்டு வந்த நிலையில், பூனேவில் போட்டிகள் நடத்தப்படுவதற்கு தடை விதிக்கபடவுள்ளது. 
 
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டங்கள் நடைபெற்று வருவதால், இந்த வேலையில் ஐபிஎல் போட்டிகள் சென்னையின் நடக்ககூடாது என எதிர்ப்புகள் கிளம்பியது. 
 
எனவே, வீரர்கள் பாதுகாப்பு, வருமானம் குறைவு ஆகிய அம்சங்ககளை கணக்கில் கொண்டு இனிவரும் போட்டிகள் சென்னையில் நடத்தப்படாது என்று ஐபிஎல் போட்டி நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கு பதில் அடுத்த 6 போட்டிகள் பூனேவில் நடக்கும் என கூறப்பட்டது.
 
ஆனால், பூனே மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அம்மாநில அரசு வழக்கு தொடுத்துள்ளது. 
 
அங்கு கடுமையான தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. தண்ணீர் பிரச்சினையால் மைதானம் தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போட்டி சமயங்களில் மைதானத்தை பராமரிக்க நிறைய தண்ணீர் செலவு செய்ய வேண்டி இருக்கும் எனவே மகாராஷ்டிரா அரசு ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.