திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Updated : செவ்வாய், 22 மே 2018 (18:47 IST)

பிளே-ஆப் போட்டி: டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
 
வான்கடே மைதானாத்தில் நடைபெறவுள்ள பிளே-ஆப் சுற்று தகுதி போட்டியில் ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.
 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும். மேலும், தோல்வியடைந்த அணி நாளை நடைபெறும் பிளே-ஆப் சுற்று வெளியேற்றுதல் போட்டியில் வெற்றியடைந்த அணியுடன் மீண்டும் மோதும்.
 
இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய இரண்டு லீக் போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.