சரவெடியாய் வெடித்த ராகுல்: திணறும் பஞ்சாப் அணி

k
Last Modified சனி, 12 மே 2018 (19:09 IST)
கொல்கத்தா அணியின் இமாலய இலக்கை எட்ட அதிரடியாக விளையாடிய ராகுல் அவுட்டான பின்னர் பஞ்சாப் அணி திணறி வருகிறது.
 
கொல்கத்தா அணியின் சுனில் நரைன் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அபாரமான பேட்டிங்கால் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது. நரைன் 75 ரன்களும், கார்த்திக் 50 ரன்களும், ரசல் 36 ரன்களும் எடுத்தனர்.
 
246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் கெய்ல் அதிரடியாக விளையாடினர். இதனால் பஞ்சாப் அணி 5 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. இதையடுத்து ரசல் வீசிய 5 ஓவரில் கெயல் 21 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இதற்கு அடுத்த பந்தில் மயங்க் அகர்வால் டக் அவுட்டானார். 
 
இதைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ராகுல் 66 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் பஞ்சாப் அணி திணறி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :