திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Updated : சனி, 12 மே 2018 (11:06 IST)

வாழ்வா? சாவா? போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி

ஐபிஎல் டி20தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியுடன் மீண்டும் மோதுகிறது கொல்கத்தா அணி.


 
 
ஐபில் தொடரின் 44-வது ஆட்டம் ஹால்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் , தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
 
இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணி 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பெற்றுள்ளது. கொல்கத்தா அணியோ 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.
 
இரு அணிகளும் இதற்கு முன் மோதிய போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு பழிவாங்க கொல்கத்தா அணி வெற்றி பெற கடுமையாக போராடும். அதேபோல் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற பஞ்சாப் அணியும் வெற்றி பெற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு வரிசையில் நீடிக்க முடியும் என்ற நிலையில் கொல்கத்தா அணிக்கு இந்த ஆட்டம்  வாழ்வா? சாவா? மோதல் ஆகும்.