பஞ்சாப் அணிக்கு கார்த்திக், நரைன் கொடுத்த இமாலய இலக்கு

kk
Last Modified சனி, 12 மே 2018 (18:13 IST)
கார்த்திக் மற்றும் நரைனின் அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா அணி, பஞ்சாப் அணிக்கு 246 ரன்கள் என்னும் இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 44வது போட்டியான பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி ஹால்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது கொல்கத்தா.
 
கொல்கத்தா அணியின் சுனில் நரைன் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அபாரமான பேட்டிங்கால் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 245 ரன்கள் எடுத்துள்ளது. நரைன் 75 ரன்களும், கார்த்திக் 50 ரன்களும், ரசல் 36 ரன்களும் எடுத்துள்ளனர். பஞ்சாப் அணியின் ஆண்ட்ரூ டை நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
 
இந்த நிலையில் 245 என்ற வலுவான இலக்கை நோக்கி பஞ்சாப் அணியினர் பேட்டிங் செய்து வருகின்றனர். அந்த அணி இரண்டு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது. 245 ரன்கள் என்ற இலக்கை தொடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


இதில் மேலும் படிக்கவும் :