திங்கள், 11 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இந்திய வகைகள்
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2022 (12:46 IST)

மலச்சிக்கலை அடியோடு தவிர்க்கும் கம்பு - சத்துக்களும் அதன் பயன்களும்!

கம்பின் மருத்துவ குணங்கள் குறித்து இங்கு காணலாம்!
 
சிறு தானியங்களில் முதலிடத்தை பிடித்திருக்கும் கம்பு ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
கம்பு சுமார் 3 முதல் 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். பின்னர் மீண்டும் ஒருமுறை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்தால் மேலும் 6 மாதங்கள் கூட கெடாமல் இருக்கும். பழங்காலத்து உணவு பொருட்களில் ஒன்றான கம்பில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. 
 
கம்பில் உள்ள சத்துக்கள்:
 
புரதம், கொழுப்பு சாது, தாது உப்புகள், நார்ச்சத்துக்கள் மற்றும் மாவுசத்து. 
 
மருத்துவ குணாதிசயங்கள்:
 
உடல் உஷணமடைய செய்வதை குறைகிறது.
 
வயிற்று புண்ணை தவிர்க்கிறது. 
 
மலச்சிக்கலை தவிர்க்கிறது. 
 
உணவு வகைகள்:
 
கம்பு களி, கம்பு சோறு, கம்பு புட்டு, கம்பு கூழ், கம்பு நூடுல்ஸ், கம்பு பிஸ்கட்,