ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (11:34 IST)

இளநீரில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் உள்ளதா...?

Tender coconut
இளநீரானது தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமல்லாமல் பல உடல் நல நன்மைகளையும் அளிக்கிறது. இளநீரில் உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன் மற்றும் ஃபோலேட் ஆகியவை இயற்கையிலேயே கிடைக்கிறது.


வயிற்றுக் போக்கு பிரச்சனை இருக்கும்போது உடலில் நீர்ச்சத்து அதிக அளவில் குறைவதால் இழந்த நீர்சத்தை திரும்ப பெற இளநீர் அருந்துவது மிகவும் நல்லது.

இளநீர் தோல் சம்பந்தமான வியாதிகள் அனைத்தையும் குறிப்பாக சோரியாசிஸ் வியாதி ஏற்படாமல் தடுப்பதில் சிறப்பாக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. நமது உடலில் இருக்கின்ற நச்சுக்கள் அனைத்தும் வியர்வை வழியாக வெளியேறச் செய்து தூய்மைப் படுத்துவதால் தோலில் சோரியாஸிஸ் ஏற்படுவதற்கான காரணிகளாக இருக்கும் நச்சுக்கள் தங்காமல் வெளியேற்றி சருமத்தை காக்கிறது.

இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால் மற்றும் இளநீரை பருகும்போது வயிறும் நிறைந்து போவதால், தேவையற்ற உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைய உதவுகிறது.

இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், நீரிழவு நோய் உள்ளவர்கள் இளநீர் பருகுவது மிகவும் நல்லது. இளநீரை தொடர்ந்து அருந்துபவர்களுக்கு ஹைபர்டென்சன் எனப்படும் அதீத மன அழுத்தம் போன்றவற்றைக் குறைத்து இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.

விஷ காய்ச்சல் மற்றும் ஹேர்ப்ஸ், இவை இரண்டுமே சில வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அடங்கியிருப்பதால் வைரஸ் கிருமிகள் தாக்குதலில் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது.