வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இந்திய வகைகள்
Written By Sasikala

ஆரோக்கியம் நிறைந்த மிளகு ரசம் செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
புளி - 2 மேசைக் கரண்டி கரைத்தது
தக்காளி - 1 நறுக்கியது
கறிவேப்பிலை - சிறிதளவு
கருப்பு மிளகுத்தூள்  - 2 டீஸ்பூன் 
பூண்டு - ஒரு 5 பல்
சீரகம் - 1 டீஸ்ஃபூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
சிவப்பு மிளகாய் - 4
உப்பு -  தேவையான அளவு 
மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:
 
2 சிவப்பு மிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர், ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடு பண்ண வேண்டும். நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும்  சிறிது உப்பு சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
 
இதற்கு அடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள மிளகு சீரகம், பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை கலந்த தூளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதையடுத்து, புளிக் கரைசலுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து தீயைக் குறித்து வானலியை மூடிவைத்து 10 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். அதே நேரத்தில் ரசத்தை அதிக நேரம்  கொதிக்கவிடவும் கூடாது.