1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. vishnuvardhan father pattial sekhar died

இயக்குனர் விஷ்ணுவர்தன் தந்தை மரணம்.. திரையுலகினர் அஞ்சலி..!

vishnuvardhan
பிரபல இயக்குனர் விஷ்ணுவத்தின் தந்தை காலமானதை அடுத்து திரை உலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
அஜித்தின் அடுத்த ஆரம்பம், பில்லா உள்பட ஒரு சில படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன் என்பதும் அவரது சகோதரர் கிருஷ்ணா ஒரு நடிகர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விஷ்ணுவர்தன், கிருஷ்ணா ஆகியோர்களின் தந்தையான பட்டியல் சேகர் என்பவர் இன்று காலமானார். அவருக்கு வயது 69. 
 
கடந்த சில நாட்களாக பட்டியல் சேகர் உடல் நலம் இன்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி இன்று காலமானார். விஷ்ணுவர்த்தனை இயக்கத்தில் உருவான பட்டியல் என்ற திரைப்படத்தில் சேகர் நடித்ததை அடுத்து அவருக்கு பட்டியல் சேகர் என்ற பெயர் ஏற்பட்டது. 
 
மேலும் அவர் தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பட்டியல் சேகர் மறைவிற்கு திரையுலகினார் நேரில் அஞ்சலி செலுத்து வருகின்றனர்
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
40 ஆண்டு சினிமா பயணம் - பிரம்மாண்ட மேடையில் மீனாவுக்கு மரியாதை!