செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (08:30 IST)

அயலி சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த லவ்லின் சந்திரசேகரின் அல்ட்ரா மாடர்ன் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் மிக இளம் வயதில் இருந்து தற்போது வரை நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருப்பவர் விஜி சந்திரசேகர். ரஜினியின் தில்லுமுல்லு படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார். பின்னர் பல பாத்திரங்களில் நடித்திருந்த அவர் சமீபத்தில் மதயானைக் கூட்டம் படத்தில் உணர்ச்சிப் பூர்வமான வில்லி வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவரின் மகளான லவ்லின் சந்திரசேகர், சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றிருந்த அயலி வெப் தொடரில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அவரின் பாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

இந்நிலையில் மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.