ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (08:10 IST)

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்துக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதித்த ஹீரோ!

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்த திரைப்படம் என்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரிலீஸுக்குப் பிறகு இந்த படத்தைப் பற்றி மோசமான விமர்சனங்கள் எழுந்தன. இந்த மாதிரி ஒரு படத்தில் வடிவேலுவைப் பார்ப்பதற்காக நாங்கள் இவ்வளவு நாட்கள் காத்திருந்தோம் என ரசிகர்களேப் புலம்ப ஆரம்பித்தனர். படத்தின் தோல்விக்கு மோசமான கதை மற்றும் சுராஜின் இயக்கமே காரணம் என சொல்லப்பட்டது.

இந்த படத்தின் தோல்வியால் வடிவேலு- சுராஜ் கூட்டணியில் அடுத்து உருவாகும் படம் கூட கைவிடப்பட்டது. இந்நிலையில் இப்போது சுராஜின் இயக்கத்தில் அடுத்து ஜெயம் ரவி நடிக்க ஒத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான சகலகலா வல்லவன் என்கிற அப்பாடக்கர் படம் படுதோல்வி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.