விஜய்யின் ''பீஸ்ட்'' பட அடுத்த அப்டேட் ! ரசிகர்கள் மகிழ்ச்சி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய்- பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் உருவாக்கி வரும் படம் பீஸ்ட். மிக பிரமாண்டமாக உருவாக்கி வரும் இப்படம் இந்த ஆண்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இன்று இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய் இருவரும் நட்புடன் கட்டியணைத்துக் கொள்ளும் புகைப்படம் வைரலானது. இப்படத்தின் புரமோஷன் வீடியோ விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அதில், நாளை மாலை 5 மணிக்கு (19-12-21) பீஸ்ட் படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.